ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் இதுவரை 55 566 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதத்தில் 8,169 இந்திய பிரஜைகள் வந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இதற்கிடையில், பிரித்தானியாவில் இருந்து 4,474 பேரும் சீனாவிலிருந்து 2,893 சீன பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் இருந்து 2,824 பேரும் ரஷ்யாவிலிருந்து 2,599 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் மொத்தம் 100,388 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 680,440 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment