அண்மைய செய்திகள்

recent
-

சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரவேண்டும்

 ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுடைய பதவியையும் அவரை பற்றியும் மிக இழிவாக அமைச்சர் நசீர் அகமத் விமர்சித்திருக்கின்றார்  ஒரு அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிற ஒருவர்  இப்படி மிக மோசமான ஒரு கருத்தை சொல்லி இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என பாரளுமன்ற உறுப்பினரும் ரொலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


 இந்த நாட்டிலே வடமாகாணம்,கிழக்குமாகாணம், இந்த நாடு இங்கு இருக்கும் எல்லோரும் ஒன்று வடக்கு கிழக்கு தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம் அதே போன்று மலைகத்தில் இருக்கின்ற எங்களுடைய தமிழர்கள் இங்கே வவுனியாவில் இருக்கிறார்கள் அவர்கள் மலைகள் தமிழர்கள் அல்ல அவர்கள் வவுனியா தமிழர்கள்

 ஆகவே அந்தந்த பிரதேசங்களில் இருக்கிறவர்கள் அந்தந்த இடங்களில் ஆட்சி அமைப்பது, வேலை செய்வது ,அவர்களின் உரிமை. அரசாங்க வேலை என்பது அந்தந்த ஊரில் வழங்குவதில்லை அரச உத்தியோகஸ்தர்கள் இலங்கையின் எல்லா இடத்திலும் வேலை செய்வார்கள் ஆகவே அமைச்சர் நஸீர் அகமட் தெரிவித்த கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்

 செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின்  ஆளுநர் அவரை ஒரு ஆளுநர் என்றும் பாராது ஒரு திறமையானவர் என்று பாராது அந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவரை பொது வெளியில் ஏளனம் செய்கின்ற அமைச்சர் அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

 தயவுசெய்து இப்பிடியான கருத்துக்களை பொது வழியில் சொல்லாதீர்கள் நீங்கள் இப்படியான கருத்துக்களை சொல்வீர்களா இருந்தால் நீங்கள் ஒரு மோசமான அமைச்சராக நீங்கள் ஒரு மோசமான சிந்தனை உடையவர்களாக கருதப்படுவீர்கள்

 ஆகவே உங்களுடைய மரியாதை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எங்களை பொறுத்த வரையிலே வடக்கு கிழக்கிலே குறிப்பாக கிழக்கிலே செந்தில் தொண்டமானவர்கள் ஆளுனராக வந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அவர் தன்னுடைய திறமையை நிச்சயம் காட்டுவார்

  நஸீர் அஹமட்டுக்கு ஒன்று சொல்கிறேன் வடக்கு கிழக்கு என்பது  இணைந்த தாயகம்  அதை பிரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற உரிமை உங்களுக்கு இல்லை  நீங்கள் அந்தத் தகுதியை இழந்து விட்டீர்கள் நீங்கள் பிரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற  அந்தஸ்து உங்களுக்கு இல்லை 

இது  வடக்கு கிழக்கு இணைந்து தாயகம் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகத்தான் பார்க்கப்படுகின்றது ஆகவே நீங்கள் உங்களுடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் உங்களுடைய மரியாதை இல்லாமல் போகும் நீங்கள் ஒரு அந்தஸ்தில் இருக்கிற நிலை நிச்சயமாக மக்களால் ஏளனம் செய்யப்படும் நீங்கள் அந்த அந்தஸ்தில் இருந்து அந்த தகுதியில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள் என்று சொல்லிக்கொண்டு உடனடியாக நீங்கள் மன்னிக்க கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்

சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரவேண்டும் Reviewed by Author on July 17, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.