இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
இந்தோனேசியாவுடன், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்த்தன, இந்தோனேசியாவுடன், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கிழக்காசியாவில் பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தோனிசியா, இலங்கைக்கு நன்மையளிக்கும் வகையில் வர்த்தகத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான ஆற்றல் வளத்துடன் கூடிய வர்த்தகப் பங்காளராக, அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, நீண்டகாலத்திற்கு அந்நாட்டுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளும் நோக்கில், அதன் ஆரம்பப் படிமுறையாக முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Reviewed by Author
on
July 11, 2023
Rating:


No comments:
Post a Comment