காத்தான்குடி ஹலாவுதீன் விடயத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம், சம உரிமை என்ற யாப்பின் சரத்து மீறப்பட்டுள்ளது - கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாள
காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர் இருக்க முடியாது எனில் கிழக்கில் இலங்கை அதிபர் சேவை எவரும் கோட்ட கல்வி அதிகாரியாக இருக்க முடியாது எனவும், கிழக்கு மாகாணத்தில் 15 க்கும் மேற்பட்ட இலங்கை அதிபர் சேவையினர் கோட்டக் கல்வி அதிகாரிகளாக இருக்க முடியுமாயின் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியான இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த கே.எம். ஹலாவுதீனும் இருக்க முடியும் என கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த ஹலாவுதீன் இருக்கமுடியாதெனின் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த எவரும் கோட்டக்கல்வி அதிகாரியாக இருக்க முடியாது. இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமை தொடர்பான 111ம் அத்தியாயத்தில் கூறப்பட்ட சட்டத்தின் முன் அனைவரும் சமம், சம உரிமை என்ற சரத்து ஹலாவுதீன் விடயத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சு, மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோரால் அப்பட்டமாக மீறப்படுகிறது என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்
காத்தான்குடி ஹலாவுதீன் விடயத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம், சம உரிமை என்ற யாப்பின் சரத்து மீறப்பட்டுள்ளது - கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாள
Reviewed by Author
on
July 17, 2023
Rating:

No comments:
Post a Comment