அண்மைய செய்திகள்

recent
-

மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியாவை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த  கடலோர பாதுகாப்பு பொலிஸார் அவர்களை  மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாகவும் போதைப்பொருள் பாவனை அதனைவிட நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வகருகின்றது இதனை போலீசார் மற்றும் சட்டம் குறைப்பதாக தெரியவில்லை அரசாங்கம் நாடு நாடாக கடனினை பெற்று இருப்பவர்களை உலக கடனாளிகளாக ஆக்கு கின்றதே தவிர எங்ககளை மக்களை பாதுகாக்காத வகையில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது








.



 

மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம் Reviewed by Author on July 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.