நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் பலி
ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுகம, மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று சில நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
அங்கு நீச்சல் தடாகம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எனினும், நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த அவர், கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் பலி
Reviewed by Author
on
July 31, 2023
Rating:

No comments:
Post a Comment