அண்மைய செய்திகள்

recent
-

பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்கு தடை…..

 தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து Pita Limjaroenrat இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கும் அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவிக்கு இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்படாத ஒரு ஊடக நிறுவனத்தில் பங்கு வைத்திருந்தமை உறுதிசெய்யப்பட்டு குறித்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

தாய்லாந்து சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடக நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பது தடை விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஊடக நிறுவனமொன்றில் பங்குகளை வைத்திருந்ததை ஒத்துக் கொண்டுள்ளதுடன் தான் தேர்தல் விதிகளை மீறவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்கு தடை….. Reviewed by Author on July 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.