பலாங்கொடையில் காணாமல்போன 3 பாடசாலை மாணவிகளும் கண்டுபிடிப்பு!
பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே இம்மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மாணவிகள் எதற்காக அங்கே சென்றார்கள் என்பது குறித்தும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்தும் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
September 01, 2026
Rating:


No comments:
Post a Comment