அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் துப்பாக்கி சூடு சடலம் நாளை உறவினரிடம் கையளிக்கப்படும்

 மன்னார் அடம்பன் மினுக்கன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.


உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-43)   மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகிய இரு குடும்பஸ்தர்களே உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.


குறித்த இருவரும் இன்று (24) வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


-கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.


 பலிக்கு பலி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


-குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் பொலீசார் ஆகியோர் வருகை தந்திருந்தோடு மாலை 4:40 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிபதி K L M சாஜித் அவர்கள் வருகை தந்து உடலங்களை பார்வையிட்டதோடு பலியானவர்களின் உறவினர்கள் நேரடியாக நீபதியிடம் முறையிட்டதோடு நீதிபதியும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்  அதன்பின் சான்றுபொருளான கைதுப்பாக்கி ரவை ரவை கோது மோர்ட்டார் சைக்கில் தண்ணீர் திறப்பதற்கு எடுத்து வரப்பட்ட சாவி  மண்வெட்டி  கையடக்க இருவரின் கையடக்க தொலை பேசி  போலீசார் கையகப்படுத்தியுள்ளனர் அதன்பின் இரு சடலமும் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது நாளை உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினரிடம்  உடலம் கையளிக்கப்படவுள்ளது. குறிப்பிடத்தக்கது.












மன்னார் அடம்பன் துப்பாக்கி சூடு சடலம் நாளை உறவினரிடம் கையளிக்கப்படும் Reviewed by Author on August 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.