மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கிச்சூடு-இருவர் பலி உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகிய இரு குடும்பஸ்தர்களே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் இன்று (24) வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
பலிக்கு பலி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
-குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கிச்சூடு-இருவர் பலி உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
Reviewed by NEWMANNAR
on
August 24, 2023
Rating:

No comments:
Post a Comment