வவுனியாவில் வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொது கூட்டம்
வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுக்கூட்டமானது ( தாய் சங்கம் ) இன்று காலை 10.00 மணிக்கு வ்வுனியா சுத்தானாந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் அதன் தலைவர் திரு. P. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் வடக்கு கிழக்கு மாகான கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தாய் சங்க உறுப்பினர்கள் ஓய்வு பெற்று சென்ற காரணத்தால் தாய் சங்கத்திற்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் ஏற்கெனவே செயலாளராக கடமைபுரிந்த திரு. V. செல்வக்குமரன் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு பொருளாளரின் கணக்கறிக்கை சபையினரால் பரிசீலனை செய்யப்பட்டு மூத்த கிராம உத்தியோகத்தர்கள், இளைய கிராம உத்தியோகத்தர்களின் கலந்துரையாடலின் பின் தாய் சங்கத்திற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்றது இதில் செயலாளராக முல்லைத்தீவு மாவட்ட கிராம உத்தியோகத்தர் திரு.M.வருன்ஜீவ் அவர்களும் உப செயலாளராக மடு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் திரு. தனுசன் அவர்களும் பொருளாளராக மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் திரு. P.கதிர்காமநாதன் அவர்களும் அமைப்பின் தலைவர் , உப தலைவர்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் திரு.S.சிறிஸ்கந்தராஜா, திரு.S.லூமாசிறி ஆகியார் தெரிவாகியதுடன் வடக்கு கிழக்கு மாகானத்திலுள்ள மாவட்டத்தில் இருந்து தாய் சங்கத்திற்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் ஓய்வு பெற்ற மூத்த கிராம உத்தியோகத்தர்கள் ஆலோசனை சபைக்கு உள்வாங்கப்பட்டதுடன் விரைவில் மாவட்ட சங்கங்களுக்கான நிர்வாக தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment