யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் தாய் கடந்த 23ஆம் திகதி இரவு பாலூட்டும் போது புரைக்கேறிய நிலையில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று (24) யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நுரையீரலில் தாய் பால் சிக்கியமையினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை தகல்கள் தெரிவிக்கின்றன
.
No comments:
Post a Comment