பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு
போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான 'கணேமுல்லே சஞ்சீவ' என அழைக்கப்படும் சஞ்சீவ குமாரவிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் T-56 துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே இதுவென தற்போது தெரியவந்துள்ளது.
மேற்கு வடக்கிற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் கணேமுல்லே சஞ்சீவவிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, கணேமுல்லே சஞ்சீவ கம்பஹா மாவட்டத்தில் பல குற்றச் செயல்கள் ஈடுபட்டுள்ளமை பதிவாகியுள்ளதால், அவர் தற்போது வீரங்குல பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்லே சஞ்சீவவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

No comments:
Post a Comment