மன்னார் மடு கல்வி வலய சாதனையாளர்கள் கௌரவிப்பு.
மன்னார் மடு கல்வி வலய சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(15) மதியம் மடு கல்வி வலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
மடு வலயத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் உயர் தர பரீட்சையில் சாதனை நிலைநாட்டிய மாணவர்களையும் கௌரவிக்கும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வைத்திய கலாநிதி எம்.கதிர்காமநாதன், சமூக சேவையாளர் யதீஸ் ஆகியோர் கலந்து கொண்டதோடு சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் உயர் தர பரீட்சையில் சாதனை நிலைநாட்டிய மாணவர்கள் கௌரவிக்கப் பட்டதோடு,அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மடு கல்வி வலய சாதனையாளர்கள் கௌரவிப்பு.
Reviewed by Author
on
September 15, 2023
Rating:

No comments:
Post a Comment