: மன்னாரில் தியாக தீபத்துக்கு அஞ்சலி.
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 23.09.2023 (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
: மன்னாரில் தியாக தீபத்துக்கு அஞ்சலி.
Reviewed by Author
on
September 23, 2023
Rating:

No comments:
Post a Comment