வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்..
இலங்கை பொது நிதி கணக்குகள் சங்கத்தினால் (APFASL) வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் 2022ம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கைகள் கணக்குகள் மற்றும் செயலாற்றுகை தொடர்பான போட்டியில் வடக்கு மாகாண சபைக்குட்பட்ட 29 பிரதேச சபைகளுக்குள் வவுனியா வடக்கு பிரதேச சபை மாகாணத்தில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டு தங்க விருதினை பெற்றுள்ளது (Golden Award)
இவ் நிகழ்வு நேற்றையதினம் 22.09.2023 அன்று அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை பொது நிதி கணக்குகள் சங்கத்தின் (APFASL) தலைவர் செயலாளர் மற்றும் இவ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் மற்றும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் பிரதி செயலாளர்(நிதி), பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர்கள்,
உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேசத்தில் அரச நிறுவனங்கள் இவ்வாறான செயற்பாடானது பாராட்டபட வேண்டிய ஒன்றாகும்.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்..
Reviewed by Author
on
September 23, 2023
Rating:

No comments:
Post a Comment