அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாவீரன் விக்டரின் 37வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு !

  ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மன்னார் மண் பெற்றெடுத்த மகத்தான மாவீரன் லெப்.கேணல் விக்ரர்  அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்றய தினம் வியாழக்கிழமை (12) இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றது.


 நேற்றய தினம் மாலை 5 மணியளவில் லெப்.கேணல் விக்ரரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட  நகரசபை,பிரதேச சபை முன்னாள்
உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் உட்பட பலரும்  உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.











மன்னாரில் மாவீரன் விக்டரின் 37வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு ! Reviewed by Author on October 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.