அண்மைய செய்திகள்

recent
-

இரட்டை கொலை உள்ளிட்ட 4 கொலைகள் பதிவு

 எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகமுவ பகுதியில் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைகள் நேற்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எஹலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் 57 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் சகோதர சகோதரிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மகனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களை குறித்த நபர் தாக்கி இந்த இரட்டை கொலைகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எஹலியகொட ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறைச்சாலை ஊடாக அவரை மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்துமாறு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவசிரிகம பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நவசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் கணவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவர் சந்தேக நபருடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் வீட்டின் இருந்த போது அங்கு வந்த சந்தேக நபர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மார்புப் பகுதியில் தாக்கியுள்ளார்.

பின்னர் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், 64 வயதுடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, தரணமல்வில நகரில் உள்ள பழைய மதுபானசாலை அமைந்துள்ள கட்டிடத்தின் பின்புறம் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனமல்வில, காமினிபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேலும் மூவருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அந்த இடத்தில் இருந்த நபர் ஒருவரை போத்தலால் தாக்கியுள்ளார்.

பின்னர், சந்தேகநபர் அந்த இடத்தில் இருந்து மற்றொரு கண்ணாடி போத்தலை எடுத்து இறந்தவரின் தலையில் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




இரட்டை கொலை உள்ளிட்ட 4 கொலைகள் பதிவு Reviewed by Author on October 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.