துப்பாக்கி பிரயோகத்திற்கு காத்திருந்த இராணுவ சிப்பாய்கள் கைது
எல்பிட்டிய பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவரும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (07) இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் யாரையேனும் குறிவைத்து துப்பாக்கி பிரயோகத்திற்கு தயாராகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 10 மில்லி மீற்றர் தோட்டாக்கள் பத்தும், போலி இலக்கத் தகடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துப்பாக்கி பிரயோகத்திற்கு காத்திருந்த இராணுவ சிப்பாய்கள் கைது
Reviewed by Author
on
October 08, 2023
Rating:

No comments:
Post a Comment