4 வயது குழந்தையுடன் சென்ற பெண் விபத்தில் பலி!
நாட்டின் இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11) இரவு கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது குழந்தையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டனரான பெண் உயிரிழந்துள்ளார்..
உயிரிழந்தவர் பள்ளியவத்தை, மஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட போது அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பஸ்யால – மீரிகம வீதியில் பொஹொன்னறுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ்யால பகுதியிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment