மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 2022 சாதனையாளர்கள் கௌரவிப்பு
மன்னார் வலயக்கல்வி பணிமனை ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (11) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
-மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜீ.டி.தேவராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வங்கி முகாமையாளர்கள் மன்னார் வலயக்கல்வி முன்னாள் பணிப்பாளர்கள், உள்ளடங்களாக ஆசிரியர்கள்,சாதனையாளர்களான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது 2022 ஆம் ஆண்டுக்கான சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம் அணிவித்து வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 2022 சாதனையாளர்கள் கௌரவிப்பு
Reviewed by Author
on
October 11, 2023
Rating:

No comments:
Post a Comment