அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் சாதனையாளர் கெளரவிப்பு.

 மன்னார் மாவட்டத்தில் புகழ் பூத்த பாடசாலையான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2022 ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று(12)  வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் இடம் பெற்றது.


 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் S.கிறிஸ்து நாயகம் அடிகளார் , கெளரவ விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி. G.D. தேவராஜா ,வடமாகாண டிலாசால் அருட்சகோதரர் சபையின் இணைப்பாளர் அருட் சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் ,பாடசாலை முன்னாள் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு S. டீன்ஸன் உட்பட ப விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

 2022 ஆம் ஆண்டு தேசிய கல்வி அமைச்சு உட்பட வலய மட்டம்,மாகாண மட்டம் தேசிய மட்டம் உள்ளடங்கலாக விளையாட்டு,கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள்,பதக்கங்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டு கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

 குறிப்பாக கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகள் அதிகம் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் உயர்தர பரீட்சையில் 3A தர சித்தி பெற்ற மாணவர்கள்,சாதாரண தர பரீட்சையில் 9A தர சித்தி பெற்று சாதனை புரிந்த  மாணவர்களுக்கான கெளரவிப்பும் இடம் பெற்றது.

 அத்துடன் கடந்த வருடம் ஜனாதிபதி சாரணர் விருது,சுற்றாடல் தின நிகழ்வு உட்பட தேசிய மட்டத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவர்களும்  விருந்தனர்களால் கெளரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது










சிறப்பாக இடம் பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் சாதனையாளர் கெளரவிப்பு. Reviewed by Author on October 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.