மன்னார் -உயிர்த்தராசன் குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு.
மன்னார் -உயிர்த்தராசன் குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
சிறுவர்கள் எல்லாவற்றையும் விட சிறந்தவர்கள்' என்ற தொனிப்பொருளில் கீழ் உயிர்த்தராசன் குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி இடம் பெற்றது.
தொடர்ந்து சிறுவர்கள் வர்ண ஆடைகள் அணிந்து பேண்ட் வாத்திய இசையுடன் பல்வேறு சிறுவர் தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு பெற்றோர், ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள்,மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைவரும் கட்டுக்கரை குளம் வரை ஊர்வலமாக சென்று தங்கள் உரிமைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பியவாறு பலூன் மற்றும் புறாக்கள் பறக்க விட்டு தங்களது விழிப்புணர்வினை வெளிப்படுத்தினர்.
பின்னர் பாடசாலை திரும்பி பல்வேறு கலை நிகழ்வுகளையும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளையும் மேற்கொண்டனர்.இதற்கான பரிசில்கள் அதிபரால் வழங்கி கௌரவிக் கப்பட்டு சிறுவர் தின நிகழ்வு இனிதே கொண்டாடப்பட்டது.
மன்னார் -உயிர்த்தராசன் குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு.
Reviewed by Author
on
October 06, 2023
Rating:

No comments:
Post a Comment