உக்ரைனில் பயங்கர தாக்குதல் - 49 பேர் பலி
வடகிழக்கு உக்ரைனில் நினைவஞ்சலி நிகழ்வு மீது ரஷ்ய நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உட்பட குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டதாகக் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குப்யான் மாவட்டத்தில் உள்ள ஹ்ரோசா என்ற கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அங்கு ரஷ்யப் படைகள் சமீபத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
சுமார் 330 பேர் கொண்ட சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டலில் நினைவஞ்சலி நடத்தியதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி Volodymyr Zelensky, "மிருகத்தனமான தாக்குதலை" கண்டித்து, வான் பாதுகாப்பை வழங்குவதற்கு நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
"ரஷ்ய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவுபவர்கள் அனைவரும் குற்றவாளிகள்" என்றார்.

No comments:
Post a Comment