முல்லை ஈசன் அச்சுறுத்தல்கள் வந்தாலும் நினைவேந்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் அவர்கள் புலனாய்வாளர் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடும் ஒலிவடிவம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில் அது தொடர்பிலான விளக்க ஊடக சந்திப்பு ஒன்றினை (06.10.23) இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்தி கருத்து தெரிவித்திருந்தார்.
தாயகத்தில் நினைவேந்தல்கள் மக்கள் உதவிகளுக்காக நிதி உதவியினை வழங்கிவரும் புலம்பெயர் தமிழ் மக்களுக்காகவே இந்த ஊடக சந்திப்பினை நடத்துகின்றேன்.
காய்க்கின்ற மரத்திற்குதான் கல்லெறி வரும் என்று சொல்வார்கள் இது எனக்கு ஓயப்போவதில்லை தொடர்சியாக மக்களுக்கான பணி செய்துவரும் என்மீது சேறுபூசும் விதமாக கீழ்த்தரமாக செயற்பாடுகளை செய்து வந்துள்ளார்கள்.
இதன் போது அதில் தான் கதைத்த புலனாய்வாளர் என்று சொல்லப்பட்ட நபர் தன்னுடன் ஏற்கனவே நிறுவனம் ஒன்றின் வடமாகாண முகாமையாளராக நான் வேலை செய்யும் போது அவருக்கும் எனக்குமான உறவு ஏற்பட்டது. அவருடன் கரும்புலிநாள் தொடர்பில் நான் பேசியுள்ளோன் அதில் பல விடயங்கள் மறைக்கப்பட்டு வந்துள்ளது.
நான் என்ன வேலை செய்தாலும் எனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்து வருகின்றேன் அவர் தன்னுடைய நிலையில் இருந்து பேசியுள்ளார். இன்று பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் எத்தனை புலனாய்வு நிறுவனங்கள் காவல்துறையினர் எங்களிடம் தொலைபேசி அழைப்பினை எடுப்பார்கள்.
புலம்பெயர்ந்த உறவுகளுக்கு இங்குள்ள பொருட்களின் விலைகள் தெரியும் இந்த நிலையில் என்னை புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று கொச்சைப்படுத்தும் முகமாக மழுங்கடிக்க செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஒலி வடிவம் விடப்பட்டுள்ளது.
இதில் திட்டமிட்ட அரசியல்வாதிகளின் பின்புலமும் அவர்களுக்கு பின்னால் இருக்கின்ற புலனாய்வாளர்களின் செயற்பாடும்தான் என நான் அறிந்தோன்.
இப்போது எனக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார்கள் அவர்களின் அரசியல் பாதைக்கு ஆபத்தான நிலை என நினைத்து இந்த சதி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்த அரசியல் வாதிகள் சிலர் இருக்கின்றார்கள்.
இது முதன் முதல் அரசியல் வாதி ஒருவர்தான் தமிழரசு கட்சியின் குறுப் ஒன்றில் முதல் முதல் போட்டுள்ளார்கள் அவர்களின் அடிவருடிகள் முகநூலில் பரப்பி வருகின்றார்கள்.
ஒரு புலனாய்வாளராக இருந்திருந்தால் என்னிடம் இரகசிய தகவல்களை எடுத்திருந்தால் அவர் அந்த ஒலிப்பதிவினை எவ்வாறு வெளியிடுவார் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லை ஈசன் அச்சுறுத்தல்கள் வந்தாலும் நினைவேந்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்.
Reviewed by Author
on
October 07, 2023
Rating:

No comments:
Post a Comment