அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதம்!

 கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக, நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை, பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.


O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதம்! Reviewed by Author on October 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.