வடமாகாண கிரிக்கெட் சம்பியனானது மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி
வடமாகாணத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இடம் பெற்ற லீக் முறையிலான கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியே அடையாது இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது மன்னார் AA சூப்பர் கிங் அணி.
வடமாகாணத்தில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடினப்பந்து சுற்று போட்டியானது கடந்த ஒரு மாத காலமாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை ஏல முறையில் கொள்வனவு செய்து யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது.
குறித்த சுற்று போட்டியானது லீக் முறையில் இடம் பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிளிநொச்சி Bulls அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5/11/2023) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இறுதிப் போட்டி இடம்பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி Bulls முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்த நிலையில், கிளிநொச்சி Bulls அணி தமது இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் AA சூப்பர் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை அடைந்து குறித்த சுற்றுத்தொடர் கைப்பற்றியதுடன் இரண்டு இலட்சம் பண பரிசையும் பெற்று கொண்டது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த சட்டத்தரணி இளங்குமரன் தெரிவுசெய்யப்பட்டார்.
அதே நேரம் குறித்த சுற்றுத்தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மன்னாரை சேர்ந்த பர்னாந்து அருள் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதையும், சுற்றுப் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த சட்டத்தரணி மணிவண்ணன் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும் பெற்ற கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கிரிக்கெட் சம்பியனானது மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி
Reviewed by Author
on
November 06, 2023
Rating:

No comments:
Post a Comment