அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பொலிசாரால் இருவர் கைது!!

 வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.  


இன்று (16.11) காலை 5 மணியளவில் மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அதில் சோதனையினை முன்னெடுத்தனர்.  

இதன்போது  சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகள் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்தது.  இதனையடுத்து, குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த விசேட அதிரடிபடையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அத்துடன் வாகனத்தில் இருந்து 8 பசு மாடுகள் உட்பட 14 மாடுகள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அவற்றை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  

கைது செய்யபட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




வவுனியா பொலிசாரால் இருவர் கைது!! Reviewed by Author on November 16, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.