மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் விபத்து
மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்தானது மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த பேருந்தானது இன்று வியாழன் (2) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக வாகனம் ஒன்றுக்கு இடம் விடும் போது குறித்த பேருந்து தடம் புரண்டுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் விபத்து
Reviewed by Author
on
November 02, 2023
Rating:

No comments:
Post a Comment