அண்மைய செய்திகள்

recent
-

தேயிலை என்றாலே இலங்கைதான் - இதற்கு மலையக மக்கள்தான் காரணம்!

 மலையக தமிழ் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று(02) நடைபெற்ற நாம் 200 நிகழ்விலேயே இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 தொடர்ந்தும் உரையாற்றி  அவர்,

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். 

நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள். தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.  

தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். மலையக மக்களின் கஷ்டத்தையும் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது.

 உங்களுக்குக் கல்வி, சுகாதார, மருத்ததுவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். 



தேயிலை என்றாலே இலங்கைதான் - இதற்கு மலையக மக்கள்தான் காரணம்!


தேயிலை என்றாலே இலங்கைதான் - இதற்கு மலையக மக்கள்தான் காரணம்! Reviewed by Author on November 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.