தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் முன்னெடுப்பு
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் முன்னெடுப்பு
குறித்த பாடசாலை மாணவர்களுக்கு சூழல் அறிவை புகட்டி அவர்களுக்கு சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய அதிபர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும்,ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான என்.லோகேந்திரலிங்கம் கலந்து கொண்டார்.
இதன் போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் விவசாய போதனாசிரியர் ரி.துளசிராம் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்புரை களை நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பினால் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் முன்னெடுப்பு
Reviewed by வன்னி
on
December 24, 2023
Rating:

No comments:
Post a Comment