ஒட்டுசுட்டான் பண்பாட்டு பெருவிழாவில் பத்து பேருக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழாவில் துறை சார்ந்த பத்து பேருக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஒட்டுசுட்டான் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்ப்பாடு செய்த ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா நேற்று (13) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற.இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்த பத்து பேருக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் செல்வி துரைராசா றஜிதா அவர்களுக்கு இசைத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் மாயவன்சாமி புஸ்பகுமார் அவர்களுக்கு சிற்பத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் குலேந்திரன் யதுகுலன் அவர்களுக்கு குறும்படத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் செல்வி எழிலகன் சதுர்மிலா அவர்களுக்கு நடனத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
அத்தோடு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் சிவராசா சிவதீபன் அவர்களுக்கு நாடகத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் செல்வி தனபாலராஜ் துளசிகா அவர்களுக்கு ஓவியத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் சிவபாலசிங்கம் வாகீசன் அவர்களுக்கு இலக்கியத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் தங்கராசா நிஸாந்தன் அவர்களுக்கு அறிவிப்புத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் சின்னப்பு சின்னத்துரை அவர்களுக்கு நாட்டுக்கூத்துத்துறைக்கான பண்டாரவன்னியன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
அத்தோடு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிவரும் சண்முகம் தவசீலன் அவர்களுக்கு ஊடகத்துறைக்கான பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் பிரதமவிருந்தனராக கலந்துகொண்ட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும் முன்னைநாள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான நாகலிங்கன் வேதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரன் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் உதவிச் செயலாளர் சுரேந்திரன் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் சிவசுந்தரம் கணேசபிள்ளை மதத்தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், வெலிஓயா பிரதேச செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துகௌரவிக்கப்படடதோடு நினைவுக்கேடயம், சான்றிதழ் நினைவு பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
ஒட்டுசுட்டான் பண்பாட்டு பெருவிழாவில் பத்து பேருக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 14, 2023
Rating:

No comments:
Post a Comment