அண்மைய செய்திகள்

recent
-

கழிவுகள் கொட்டும் இடமாகிப்போன பூந்தோட்டம் பொதுச்சந்தை!

 கழிவுகள் கொட்டும் இடமாகிப்போன பூந்தோட்டம் பொதுச்சந்தை!


வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடான நிலமை உருவாகியுள்ளது.

வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூந்தோட்டம் பொதுச்சந்தை கடந்த சிலமாதங்களாக இயங்காதநிலையில் உரிய பராமரிப்பின்றி உள்ளது. 

இந்நிலையில் அண்மைய நாட்களாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி இறைச்சியின் கழிவுகளை குறித்த சிலர் வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதாரசீர்கேடான நிலமை உருவாகியுள்ளது.

வீசப்படும் கழிவுகளை மிருகங்கள் பறவைகள் காவிச்செல்வதால் அந்தபகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றது. இதனால் அந்த பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

எனவே குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவுகளை வீசுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதுடன் சந்தையினை புணரமைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

பூந்தோட்டம் பொதுச்சந்தை நீண்ட காலமாக இயங்காத நிலையில் அதற்கு அண்மையில் பல தனியார்
இறைச்சி விற்பனை நிலையங்கள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.










கழிவுகள் கொட்டும் இடமாகிப்போன பூந்தோட்டம் பொதுச்சந்தை! Reviewed by வன்னி on December 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.