வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று பல்கலைக்கழக வாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவேளை நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தின் போது கல்வி சாரா ஊழியர்களின் சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையில் வாழ்க்கைச் செலவுக்கேற்ப கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்கின்ற பதாதைகள் ஏந்தி இருந்ததோடு குறித்த போராட்டத்திற்கு அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் தமது போராட்டமானது வேறு வடிவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.
Reviewed by வன்னி
on
January 18, 2024
Rating:





No comments:
Post a Comment