வவுனியா புளியங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
வவுனியா புளியங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது.
வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்
பற்றி தெரியவருவதாவது,
புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (11) புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்கஹவலைக்கு செல்லும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சோதனை செய்த போது ஒரு கிலோ 350 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச்சென்ற பொல்கஹவலையை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு புளியங்குளம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Reviewed by வன்னி
on
January 12, 2024
Rating:


No comments:
Post a Comment