அண்மைய செய்திகள்

recent
-

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களால் தடுத்து நிறுத்தம்

 அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களால் தடுத்து நிறுத்தம்.



முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் குறித்த அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் இந்த இடத்தில் நாம் எமது உறவுகளை புதைத்துள்ளோம் இந்த காணியை அளவிட அனுமதிக்க மாட்டோம் என்றதன் அடிப்படையில் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மக்களுடன் இணைந்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் அவர்களும் மக்களுடன் கலந்துகொண்டனர்.





















அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களால் தடுத்து நிறுத்தம் Reviewed by வன்னி on January 18, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.