அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு நிலைக்கு திரும்புகிறது ; மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் ஹரீஸ் எம்.பி நடவடிக்கை !
அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு நிலைக்கு திரும்புகிறது ; மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் ஹரீஸ் எம்.பி நடவடிக்கை !
அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்த அடை மழை மற்றும் வெள்ளத்தை கட்டுப்படுத்த அணைக்கட்டுகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பல்வேறு குடும்பங்கள் இடம்பெயர்ந்தும், சில குடும்பங்கள் வெள்ளத்தினுள்ளும் வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்த மக்களின் தற்போதைய நிலைகளை ஆராயவும், நிவாரண உதவிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பல்வேறு நடவடிக்கைகளை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் வெள்ள நிலைகளை கண்டறிந்த அவர் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான நிவாரண தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பிலும் இடம்பெயர்ந்த மற்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவை குழு தலைவர் அப்துல் ஹலீம் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடி தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளரையும் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஜனாதிபதி செயலாளர், அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் என பலரையும் தொடர்புகொண்டு மக்களுக்கு தேவையான அவசர தேவைப்பாடுகள் தொடர்பிலும், நிதி விடுவிப்பு தொடர்பில், வெள்ளநீர் வடிந்தோட செய்ய தேவையான விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment