அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல கிராமங்களில் ஊடுருவிய கட்டாக்காலி எருமை மாடுகள்-மக்களின் பயன் தரும் மரங்கள் சேதம்.

 மன்னாரில் பல கிராமங்களில் ஊடுருவிய கட்டாக்காலி எருமை மாடுகள்-மக்களின் பயன் தரும் மரங்கள் சேதம்.




மன்னார்  பிரதேச செயலக பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் கட்டாக்காலி எருமை மாடுகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக மன்னார் பிரதான பாலம் ஊடக மன்னார் நகர பகுதிக்குள் கூட்டமாக வருகை தரும் எருமை மாடுகள் ஜிம்றோன் நகர், எழுத்தூர்,எமில் நகர்,சாந்திபுரம் உற்பட பல்வேறு கிராமங்களுக்குள் சென்று மக்களின் வீடுகளின் சுற்று வேலிகளை சேதப்படுத்தி வீட்டில் உள்ள தென்னை மரம் உள்ளடங்களாக பலன் தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும்,குறிப்பாக வீதியால் செல்லும் மக்களையும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


-எனவே குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள போதும் மன்னார் நகரசபை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


உடனடியாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு குறித்த எருமை மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்,மன்னார் பகுதியில் வருகை தந்துள்ள கட்டாக்காலி எருமை மாடுகளை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







மன்னாரில் பல கிராமங்களில் ஊடுருவிய கட்டாக்காலி எருமை மாடுகள்-மக்களின் பயன் தரும் மரங்கள் சேதம். Reviewed by வன்னி on January 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.