அண்மைய செய்திகள்

recent
-

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு கூட்டம்.

 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு கூட்டம்.




கல்முனை மாநகர 13ம் வட்டாரத்தில்

கல்முனை- 2,3,4ம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம்.நிஸார் தலைமையில் இன்று (02) கல்முனையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்டீன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. ஹலீலுர் ரஹ்மான், கல்முனை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி நாஸர், வேட்பாளர் ஜௌபர் ஹாஜியார் மற்றும் கல்முனை பிரதேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.









சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு கூட்டம். Reviewed by வன்னி on February 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.