அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிபாய்ந்தகல் பகுதிக்கு விஜயம்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புலிபாய்ந்தகல் பகுதிக்கு விஜயம் செய்து அங்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் பார்வையிட்டார்
புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மைக்காலமாக உரிய அனுமதிகள் ஏதுமின்றி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ள தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வருகைதந்து வாடி அமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதன்போது குறித்த பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கும் முறுகல் ஏற்ப்பட்டது
இந்நிலையில் குறித்த பகுதியை பார்வையிட்ட அமைச்சர் குறித்த பகுதியில் அத்துமீறி வாடியமைத்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட யாருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

No comments:
Post a Comment