வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபான நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
பூந்தோட்டம் பகுதி அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதேசமாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஏற்கனவே மதுபான நிலையம் ஒன்று அந்த பகுதியில் இயங்கி வருகின்றது. அதற்கு மேலதிகமாக பூந்தோட்டம் சந்தி பகுதியில் பிறிதொரு மதுபான நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே, ஒரு மதுபானநிலையம் இயங்கி வரும் நிலையில் மேலும் ஒரு மதுச்சாலையினை திறப்பதால் கலாசார சீரழிவுகள் அதிகரிக்கும் நிலமை காணப்படுவதுடன், அந்தபகுதியை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிராக பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று கோரி மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் மகஜர் கையளித்துள்ளனர்

No comments:
Post a Comment