அண்மைய செய்திகள்

recent
-

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகம் முற்றுகை

 வெடுக்குநாறி மலை ஆலயத்தில் வைத்து கைதான ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் 5 பேர் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


இhதன்போது, தமக்கான நீதியை வலியுறுத்தி ஆலய பூசகர் உள்ளிட்ட 5 பேர் இன்றும் 4வது நாளாக உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது உடல்நிலை குறித்து இதுவரையில் எந்தவித செயற்பாடுகளையும் மனிதஉரிமை ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தனர்.


இதன்போது, மனிதவுரிமைக் ஆணைக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களிடம் இருந்து முறைப்பாடுகளையும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிடுவதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.  


பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் மனிதவுரிமை ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகம் முற்றுகை Reviewed by Author on March 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.