அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வரப்போகும் அதிரடி மாற்றம்

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை  (29) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில்  சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.


அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த  கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.


வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது. இருந்த போதும் எம்மிடம்  காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி  சேவையாற்றி வருகிறோம்.


எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம் அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த கூட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை,  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வரப்போகும் அதிரடி மாற்றம் Reviewed by Author on March 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.