மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் இன்று (18) திங்கட்கிழமை காலை முதல் மதியம் வரை மாந்தை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த மாபெரும் இரத்த தான முகாமில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலக அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்.
Reviewed by Author
on
March 18, 2024
Rating:

No comments:
Post a Comment