அண்மைய செய்திகள்

recent
-

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இணையவழி பாதுகாப்பு செயலமர்வு

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,லைகா ஞானம் அறக்கட்டளையானது மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியுடன் இணைந்து  இளம் பெண்களின் நல்வாழ்வு மேல் கொண்ட அக்கறை நிமிர்த்தமாக டிஜிட்டல்முறைமை மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான அறிவை மேம்படுத்தும்நோக்கில் 2024 மார்ச் 7ம்திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு நிகழ்வுஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் 10 முதல் 13 ஆம்வகுப்பு வரை கல்விகற்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். அடுத்தபெண் தலைமுறையினருக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பான தெளிவான அறிவூட்டலை வழங்குவதனூடாக பெண்களின் சுய பாதுகாப்பிற்கான ஸ்திரத்தன்மையை மேன்படுத்தக்கூடியதாக இவ் நிகழ்வு அமைந்திருந்தது.  


இந்த நிகழ்வு, "பெண்களுக்கானடிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு" என்பதை கருப்பொருளாக கொண்டமைந்திருந்து. நிகழ்நிலையை (ஆன்லைனை) இயக்க தேவையான தெளிவான அறிவு மற்றும் நிகழ்நிலை தொடர்பானதிறன்களை இளம் பெண்களிடையே மேம்படுத்துதல் மையமாகக் கொண்டு இவ்நிகழ்வு அமைந்திருந்தது.  அத்துடன் இது ஒரு இணையபாதுகாப்பு பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதை தாண்டி டிஜிட்டல்பின்னடைவு கலாச்சாரத்திலிருந்து பெண்களை வளப்படுத்துவதையும் நோக்கம் ஆக கொண்டமைந்திருந்தது. 


இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்களான இளம்பெண்கள், ஆன்லைனில் எதிர்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட சவால்களை வெற்றிக்கரமாக  எதிர்கொள்ளும் வகையில் கலந்துரையாடல் மற்றும்  செயற்பாட்டு அமர்வுகளும் இடம்பெற்றன. சிறந்த முறையில்  வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு இலகுவான முறையில் தெளிவூட்டல்களை அழித்தமைக்கு மன்னார்சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினர் நன்றிகளை  தெரிவித்ததுடன் லைக்கா ஞானம்அறக்கட்டளையின் இவ் முயற்சிகளுக்கு முழு மனதுடன் ஆதரவினையும் வழங்கியிருந்தனர். 


மேலும் குறித்த தினத்தில் மன்னார் அடம்பன் கிராமத்திலும் சமூக மட்ட பெண் தலைவர்களுக்கான இணையவழிப் பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கத்து.



லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இணையவழி பாதுகாப்பு செயலமர்வு Reviewed by Author on March 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.