மன்னார் பேசாலை பங்கு சமூகம் ஏற்பாடு செய்து சிறப்பாக இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க 'குற்றம் கழுவிய குருதி ' உடக்காலான திருப்பாடுகளின் ஆற்றுகை.
மன்னார் பேசாலை பங்கு சமூகம் பெருமையுடன் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'குற்றம் கழுவிய குருதி ' உடக்காலான திருப்பாடுகளின் ஆற்றுகை நேற்று (29) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பாஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணி பேரவையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி உடக்கு பாஸ் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார்,பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார்,ஆயரின் செயலாளர் அருட்தந்தை கரண் அடிகளார்,ஆகியோர் கலந்து கொண்டதோடு,பேசாலை பங்கு சமூகம் உள்ளடங்கலாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது பேசாலை பங்கு சமூகம் பெருமையுடன் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'குற்றம் கழுவிய குருதி ' உடக்காலான திருப்பாடுகளின் ஆற்றுகை சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment