அண்மைய செய்திகள்

recent
-

விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்னொருவர் கைது

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார் 


இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை  கொலை செய்துள்ளார்


இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியபபடுததப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது


மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் துஸ்பிரயோகம் தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறிவருகிறது எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 



விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் தவறான உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்னொருவர் கைது Reviewed by Author on March 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.