மொட்டு கட்சியில் நாமலுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, அங்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
மொட்டு கட்சியில் நாமலுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி
Reviewed by Author
on
March 27, 2024
Rating:

No comments:
Post a Comment