ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வவுனியாவில் விசேட வழிபாடும் இலவச காப்புறுதித் திட்டம் வழங்கும் நிகழ்வும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வவுனியாவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கட்சி அங்கத்தவர்களுக்கு இலவச காப்புறுத் திட்டம் வழங்கும் நிகழ்வும் இன்று (24.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன் தலையில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை அவருக்கு ஆசி வேண்டியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
கந்தசாமி ஆலய பிரதம குரு தலைமையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கும் திடடடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வன்னித் தேர்தல் தொகுதியில் 2000 பேருக்கு இலவச காப்புறுத்திட்டம் வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக வவுனியாவைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் 100 பேருக்கு காப்புறுதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment