வவுனியா- புதிய சாளம்பைக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
வவுனியா, புதிய சாளம்பைக்குளம், மஸ்ஜிதுல் அக்ஸா ஜீம்மா பள்ளியில் இப்தார் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் என்.பி.ஜீனைத் மதனி அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நோன்பு இருந்த அக் கிராம மக்கள் இன்று (23.03) மாலை 6.25 இற்கு மஸ்ஜிதுல் அக் ஸா ஜீம்மா பள்ளிக்கு வருகை தந்து இப்தார் நிகழ்வில் பங்குபற்றியதுடன், தொழுகையிலும் ஈடுபட்டனர். இதில் வவுனியா பல்கலைக்கழக இஸ்லாமிய மாணவர்கள், புதிய சாளம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா- புதிய சாளம்பைக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
Reviewed by Author
on
March 24, 2024
Rating:

No comments:
Post a Comment